• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சித்ரா மரணம் தற்கொலையே! – காவல்துறை தகவல்

December 10, 2020 தண்டோரா குழு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் மரணம் குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பி இருந்தனர். இதையடுத்து, சித்ராவின் உடல் கூறாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரேத பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையின்படி சித்ரா தற்கொலை செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சித்ராவின் கன்னத்தில் இருந்த கீறல் அவருடைய நகக்கீறல் என்றும் தெரிவித்துள்ளனர்.இதைத்தொடர்ந்துசித்ரா தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க