• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மந்த கதியில் கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் – போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் தவிப்பு

December 10, 2020 தண்டோரா குழு

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டம் வரை சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில் சுமார் 29 தூண்களுடன் உயர்மட்ட மேட்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில் சுமார் 15 துாண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது.

இதனிடையே மேம்பால பணிகள் தாமதம் காரணமாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கவுண்டம்பாளையம் மேம்பாலபணிகள் தற்போது போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் நடந்து வருகிறது. மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

மேலும் படிக்க