• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் போராட்டம்

November 30, 2020 தண்டோரா குழு

டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் உட்பட விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இலட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக அதன் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரியும் தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கைகளில் தென்னங்கன்று, வாழை,மாமர கன்று உள்ளிட்ட விவசாய பயிர் செடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க