• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்விரோதத்தில் நாய் மற்றும் கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்ற கொடூரம்

November 28, 2020 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையம் அருகே முன்விரோதத்தில் நாய் மற்றும் கோழிகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் அருகே இடையர்பாளையம், பூம்புகார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா இவரின் மகன் அழகு (43).இவர் துடியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கோவில் மேடு பகுதியில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆடு மாடு நாய் ஆகியவற்றை வளர்த்து வருகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னை சிலர் மிரட்டினர்.

இந்த நிலையில், நான் வளர்த்து வரும் நாய், கோழிகளுக்கு யாரோ விஷம் வைத்துக் கொன்று விட்டனர். எனவே, விலங்குகளுக்கு விஷம் வைத்துக் கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க