• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனியார் ஓட்டலில் சாம்பாரில் எலி – குடும்பத்தார் அதிர்ச்சி

November 22, 2020 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனை முன்பு உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சாம்பாரில் எலி இருந்ததால் நோயாளி குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் உள்ள டேஸ்டி என்ற ஹோட்டலில் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளி குடும்பத்தார் இட்லி மற்றும் சாம்பார் பார்சல் வாங்கியுள்ளார். இதனை பிரித்துப் பார்க்கும்போது சாம்பாரில் எலி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளி குடும்பத்தார் ஹோட்டல் கடைக்கு வந்து கேள்வி எழுப்பியதை அடுத்து கடை உரிமையாளர் லாவகமாக எலி இருந்த சாம்பாரை கடைக்குள் எடுத்துச்சென்று ஷட்டரை சாத்தி விட்டார்.

தொடர்ந்து அங்கு பொதுமக்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.பின்பு மீண்டும் ஹோட்டல் கடையைத் திறந்து வியாபாரத்தை நடத்தி வருகிறார்.இந்த ஹோட்டலில் இதுவரை மூன்று முறை இம்மாதிரியான சம்பவங்கள் நடந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க