• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே 2 குழந்தைகள் கடத்தல் பெண்ணுக்கு வலை

November 20, 2020 தண்டோரா குழு

கோவையை அடுத்த கோவைபுதூரில் உள்ள மலை நகரை சேர்ந்தவர் மைதீன். இவரது மகள் சர்மிளா ( வயது 12) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் இவரது மகன் சியாம் (வயது 14 )அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று மாலையில் வீட்டில் இருந்த இவர்கள் இருவரையும் திடீரென்று காணவில்லை விசாரணையில் இருவரையும் அதே பகுதியில் வசித்துவரும் செந்தில் என்பவரின் மனைவி பவித்ரா (வயது 35) ஆசை வார்த்தை காட்டி ஆட்டோவில் கடத்திச் சென்றதாக தெரியவந்தது.

இதுகுறித்து இருவரது பெற்றோர்களும் பேரூர் போலீசில் செய்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகிறார்கள் 2 குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பவித்ராவுக்கு குழந்தைகள் இல்லை இதனால் இருவரையும் கடத்தி சென்றாரா? அல்லது விற்பனை செய்வதற்கு கடத்திச் சென்றாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க