• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முட்டையில் ஓவியம் வரைந்து சர்வேத விருது வென்ற கோவை மாணவி

October 31, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட தொண்டாமுத்தூர் பகுதி உலியம்பாளையத்தை சேர்ந்தவர் மோனிஷா. தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ பயின்று வருகிறார். ஓவியத்தில் மிகவும் ஆர்வமிக்க இவர் கடந்த பிப்ரவரி மாதம் புது முயற்சியாக முட்டையில் தேச தலைவர்கள் 50 பேரின் ஓவியத்தை குறைந்த நேரத்தில் வரைந்து சாதனை படைத்தார்.

அவரின் சாதனைக்கு “இந்தியன் புக் ஆப் ரெகார்”, “கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” என்ற இரு விருதுகள் கிடைத்தன. இந்நிலையில் அவர் வரைந்த ஓவியத்திற்கு “Global excellence” என்ற சர்வதேச விருது கிடைத்துள்ளது. Incredible Talents என்ற நிறுவனம் நடத்திய சர்வதேச ஓவிய போட்டியில் 2000 பேர் கலந்து கொண்டதில் முதல் 25 தேர்ச்சியாளர்களில் இவர் வென்றுள்ளார். முட்டையில் ஓவியம் வரைந்து சாதனை புரிந்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் இந்த ஊரடங்கு காலத்தில் மினியச்சர் பொருட்கள், ஓவியம் போன்ற பலவற்றை செய்துள்ளதால் இவருக்கு சென்னையில் “Doctorate Award for young Archiver” என்ற விருதும் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி கின்னஸ் போட்டியில் ஓவியம் வரைந்து இறுதி முடிவிற்காக காத்து கொண்டிருக்கிறார். இவரின் சாதனைகளுக்கு அப்பகுதியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் படிக்க