• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சாய்பாபா கோவிலில் பாபாவின் 102 சமாதி தின சிறப்பு பூஜை

October 26, 2020 தண்டோரா குழு

அரசு விதிமுறைகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி பாபாவின் 102 சமாதி தின சிறப்பு பூஜை கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவிலில் நடைபெற்றது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோவிலில் 102 ம் ஆண்டு சமாதி தின ஆராதனை விழா நடைபெற்றது.அரசு விதிமுறைகளுடன் பக்தர்கள் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு முக கவசங்களுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து ,சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம், பாலபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம் செய்து, கணபதி, நவக்கிரக உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது.

நாகசாய் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.இதனை தொடர்ந்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் துணை தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் கூட்டாக பேசுகையில்,கோவில்களை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு தங்களது நன்றிகளை தெரிவிப்பதாகவும்,அரசு விதிமுறைகளுடன் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் பாபாவின் தரிசனம் கிடைக்கும் விதமாக சமூக இடைவெளியை பின்பற்றி பூஜயை நடத்தியாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க