• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலை விரைவில் தடுக்க முடியும் – இ.எஸ்.ஐ டீன் பேட்டி

October 19, 2020 தண்டோரா குழு

பண்டிகை காலம் என்பதால் மக்கள் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க நெருக்கமாக கூடுவதால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் எனவே சமூக இடைவெளியை பின்பற்றி முகவசங்களை மக்கள் கட்டாயம் அணிய வேண்டும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் தன்னார்வலர்களும் அரசுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கோவை இந்தியன் பவுண்டேசன் சார்பாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக பணி புரியும் வகையில் இலவச கையுறைகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில் இந்தியன் பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் விஷ்ணு பிரபு இ.எஸ்.ஐ மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலாவிடம் வழங்கினார்.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் நிர்மலா,

தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க நெருக்கமாக கூடுவதால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் எனவே சமூக இடைவெளியை பின்பற்றி முகவசங்களை மக்கள் கட்டாயம் அணிந்து குழந்தைகள் சிறுவர்கள் போன்றவர்களை கடை வீதிக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலை விரைவில் தடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் யங் இந்தியன் பவுண்டேசன் தாளாளர் கார்த்திகேயன் நிர்வாக உறுப்பினர்கள் வெங்கட்,பிலிப் பிரபு,மற்றும் மெட்ராத்தி ஜமீன் விஜயகுமார்,கட்டபொம்மன் ஜமீன்தார் சீனி கந்தசாமி,கலைமான் கள்ளிமடை காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க