• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய கோவையில் தீர்மானம்

October 19, 2020 தண்டோரா குழு

பிரதான் மந்திரி ஜன் கல்யாண் காரி யோஜனா திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசுடம் பரிந்துரை செய்ய கோவையில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

இந்தியாவில் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை வெளியிட்டார். மேலும் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அரசின் திட்டங்கள் குறித்து எடுத்து கூறும் விதமாக நாடு முழுவதும் பிரதான் மந்திரி ஜன் கல்யாண் காரி யோஜனா பிரிவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை புரூக் பீல்டு சாலையில் உள்ள தனியார் அரங்கில் பிரதான் மந்திரி ஜன் கல்யாண் காரி யோஜனா மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் ஜெயகணேஷ் தலைமையில் நடைபெற்ற இதில் மத்திய அரசின் கடந்த ஆறு மாத கால நலத்திட்டங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் ஜெய்கணேஷ்,

இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வரும் காலங்களில் ஒரு இலட்சம் பேர் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்புகள் உருவாக மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில் தமிழக ஆலோசனை குழு தலைவர் திரு பிரபுல்ஜீ, மாநில செய்தி தொடர்பாளர் செந்தில் குமார், மாநில செயலாளர்கள் சிவக்குமார், சண்முகவடிவேல்,புருஷோத்தமன் உள்ளிட்ட தமிழகம் முழுவதுவம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க