• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி அருகே கிணற்றில் விழுந்து கணவன் – மனைவி உயிரிழப்பு !

October 19, 2020 தண்டோரா குழு

பொள்ளாச்சி அடுத்துள்ள வடக்கிபாளையம் பகுதியில் கணவன் மனைவி இருவரும் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோவிந்தராஜ் செட்டியார் தோட்டம் உள்ளது. இங்கு மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த பிரபு குமார்,நந்தினி தம்பதியினர் கடந்த 5 ஆண்டுகளாக தங்கி விவசாயக் கூலி வேலை செய்துவருகின்றனர்.இவர்களுக்குத் திருமணமாகி சிவக்குமார்(3)என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.

நேற்று இருவரும் குடிபோதையில் குடும்பத்தகராறு காரணமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது திடீரென குடியிருக்கும் வீட்டிற்கு சுமார் 25 அடி தூரத்தில் உள்ள கிணற்றில் நந்தினி குடிபோதையில் ஓடிபோய் விழ அருகில் இருந்த கணவன் பிரபுகுமார் மனைவியை காப்பாற்ற ஓடிப்போய் கிணற்றில் விழுந்துள்ளார்.வீட்டில் இருந்த பிரபுகுமாரின் அத்தைமகன் மகேந்திரகுமார் பார்த்து சத்தம் போட அருகில் இருந்தவர்கள் கிணற்றில் போய் பார்க்க இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.

தோட்ட உரிமையாளருக்கு தோட்ட உரிமையாளர் முருகானந்தம்தகவல் கொடுத்ததின் பேரில் வடக்கிபாளையம் காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க