• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

October 16, 2020 தண்டோரா குழு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க கூடாது எனவும் உயர் கல்வி சிறப்பு நிறுவனம் என்ற முடிவை கைவிடுவதுடன் மத்திய அரசு நெறிமுறைகளை ஏற்க கூடாது எனவும்,மாநில அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் மாணவர் சங்க நிர்வாகிகளை மட்டும் ஆட்சியரிடம் அழைத்து சென்றனர். கோரிக்கை குறித்த மனுவினை ஆட்சியரிடம் வழங்கிய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க