October 13, 2020
தண்டோரா குழு
தனது பிறந்த நாளில் 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தன்னுடையே இல்லத்தில் வைத்து அசைவ விருந்து வழங்கி அசத்திய தன்னார்வலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவையில் அ.தி.மு.க.உறுப்பினரும், அம்மா சேவா சேரிட்டபிள் டிரஸ்டின் அறங்காவலர் சோனாலி பிரதீப் கொரோனா கால நேரங்களில் மலைவாழ் மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.
இந்நிலையில் இவரின் கணவரும், டிரஸ்டின் துணை அறங்காவலரும் ஆன பிரதீப் ஜோஸ் தனது பிறந்த தினத்தை P.N.T காலனியில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடினார். விழாவை முன்னிட்டு தனது பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை தமது இல்லத்திற்கே வழவழைத்து, பிரியாணி, சிக்கன் கிரேவி,மற்றும் வடை பாயாசத்துடன் அறு சுவை சைவ உணவு வழங்கி அசத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தனது பிறந்த நாளில் சமுதாய சேவை பணியில் உள்ளவர்களை ஏதாவது ஒரு வகையில் அங்கீகரிக்கும் வகையில் இந்த சேவையை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தம்முடைய பிறந்த நாளில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து வழங்கிய இவருடைய இந்த சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.