• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒன் இந்தியன் முக கவசம் கோவையில் அறிமுகம்

October 13, 2020 தண்டோரா குழு

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உயர் தரத்தில் குறைந்த விலையிலான ஒன் இந்தியன் முக கவசம் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

கொரோனா பரவல் வேகமாக பரவி வரும் நிலையில் நோய் தொற்றிலிருந்து பொது மக்கள் தங்களை காத்து கொள்ள முக கவசங்கள் கட்டாயம் அணிய தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சந்தைகளில் பல்வேறு விதமான முக கவசங்கள் தொடர்ந்து விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் உயர் தரத்தில் குறைந்த விலையில் ஒன் இந்தியன் நிறுவனம் சார்பாக முக கவசம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக விழா கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் ஒன் இந்தியன் face mack நிறுவனர் மற்றும் சி.இ.ஓ சிரில் ஆண்டணி பேசுகையில்,

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழை எளிய பொதுமக்களுக்கு மூன்று மற்றும் ஆறு லேயர்கள் கொண்ட முகக் கவசங்கள் ஒன் இந்தியன் ஃபேஸ் மாஸ்க் நிறுவனம் தயாரிக்கப்பட்டு அரசு மருத்துவ துறைகள் மற்றும் அனைத்து மருத்துவ கடைகளையும் கிடைக்கும் வகையில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ஒரு சேவையாக தொடங்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்ட 3 மற்றும் 6 லேயர்கள் கொண்ட முகக் கவசங்கள் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையிலும் மிக குறைந்த விலையான 30 ரூபாயில் கிடைக்கும் வகையில்,தரமான முறையில்
உருவாக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க