October 13, 2020
தண்டோரா குழு
பாஜகவில் இணைந்தாலும் பெரியார் ஆதரவாளராகவே நான் நீடிக்கிறேன் என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
பாஜகவில் இணைந்தது குறித்து சென்னை கமலாலயத்தில் குஷ்பு விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர்,
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் பாஜகவில் இணைந்துள்ளேன்.நிதானமாக யோசித்த பிறகே காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளேன்.காங்கிரஸ் கட்சியில் உண்மையை பேசுவதற்கு சுதந்திரம் இல்லை என்பதால் விலகியுள்ளேன்.
தமிழகத்தின் ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலர பாடுபடுவது எனும் உறுதி மொழியுடன் பாஜகவில் சேர்ந்துள்ளேன். காங்கிரசில் இருந்தபோது மனசாட்சியின்றிதான் பாஜகவை விமர்சித்தேன். நான் நடிகைதான்;ஆனால் கே.எஸ்.அழகிரி தலைவர் வேடத்தில் நடிக்கிறார். தமிழகத்தில் மட்டும் அல்லாமல் மற்ற மாநிலங்களிலும் நான் கட்சிப் பணியாற்றிய போது நான் நடிகையாக தெரியவில்லையா? நான் பாஜகவில் இணைய உள்ளதாக ரூ.2க்கு ட்வீட் போட்டது காங்கிரஸ் கட்சியினர் தான்.நான் எனது கணவரின் நிர்பந்ததால் தான் பாஜகவில் சேர்ந்துள்ளதாக காங்கிரசார் கூறுவது அவர்களின் கேவலமான சிந்தனை.
பாஜகவில் இணைந்தாலும் பெரியார் ஆதரவாளராகவே நான் நீடிக்கிறேன்.
தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியை கூட எதிர்த்துள்ளார், அதற்காக அந்த கட்சியில் யாரும் சேராமலா உள்ளார்கள்? பிற கட்சியில் இருந்து விலகி வேறு யாரும் காங்கிரசில் சேரவில்லையா?’ நான் இன்னமும் பெரியாரிஸ்ட் தான்; பெண்களுக்காக குரல் கொடுத்தார் பெரியார் என்றார்.