• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாக வந்த சேவல் சாகசம் செய்கிறது !

November 4, 2016 தண்டோரா குழு

ஜப்பானில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் விலங்குகளின் உணவுக்காக தருவிக்கப்பட்ட சேவல் மூன்று முறை மரணத்திலிருந்து உயிர் தப்பியது. இதன் விளைவாக, அது ’அதிர்ஷ்டக்கார பறவை’ என்று புகழ் பெற்றுள்ளதுடன், விலங்கியல் பூங்காவுக்கும் வரும் பார்வையாளர்களை அதிகமாகக் கவர்கிறது.

மசாஹிரோ என்ற அழைக்கப்படும் அந்த சேவல், ஒசாகா நகரம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்டது.

ஒசாகா நகரில் உள்ள டென்னோஜி விலங்கியல் பூங்காவில் ரக்கூன் (ஒருவித கழுதைப் புலி) என்ற விலங்குக்கு உணவாக இந்த மசாஹிரோ சேவல் தருவிக்கப்பட்டது. ஆனால், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட வாத்துக் குஞ்சுகளுக்கு “வளர்ப்புத் தந்தையாக” மாறிவிட்டது. வாத்துக் குஞ்சுகள் இரையைத் தேடவும் உண்ணவும் தாய் தந்தை வாத்துகளதான் பயிற்சி தரும். செயற்கை முறையில் பிறந்த அவற்றுக்கு இந்தப் பயிற்சியை அளிக்க மசாஹிரோ சேவல்தான் பயன்படுத்தப்பட்டது.

இருந்தாலும் ஒரு நாள் இரையாகப் போக வேண்டியதுதானே ! அதையடுத்து, அந்த விலங்கியல் பூங்காவில் பறவைகளைத் தாக்கி வந்த ஒரு காட்டு மரநாயைக் கவர்ந்து பிடிப்பதற்கான தூண்டில் புழுவைப் போல மசாஹிரோ வைக்கப்பட்டது.

ஆனால், அதன் அதிர்ஷ்டம் காட்டு மரநாய் அங்கு வரவேயில்லை. இதனால், அது இரண்டாவது முறையாக உயிர் தப்பியது.அத்துடன் முடியவில்லை. அந்த விலங்கியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இரவு உணவாக பல விலங்குகள், பறவைகளை வைத்தனர். ஒவ்வொன்றாக வைக்கப்பட்டாலும், அதிர்ஷ்டவசமாக மசாஹிரோவின் முறை வரவேயில்லை என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

திடீரென்று, அலுவலர்களுக்கு ஏதோ தோன்றியது. மூன்று முறை மரணத்தின் வாயிலிலிருந்து தப்பிய மசாஹிரோ “ஏதோ அதிர்ஷ்டமுள்ள விசேஷ சேவல்” என்று முடிவு செய்து, அதை எந்த விலங்குக்கும் உணவாக்காமல் விட்டு வைத்தனர்.

அதன் பின்னர், டென்னோஜி விலங்கியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை மசாஹிரோ வெகுவாக ஈர்த்துவிட்டது. வரும் பார்வையாளர்களும் அந்த மசாஹிரோ சேவலைப் பிடித்து வைத்துக் கொண்டாலோ, தேய்த்தாலோ அதன் அதிர்ஷ்டம் தங்களுக்கும் ஒட்டிக் கொள்ளும் என்று அதைக் கொஞ்சுகிறார்கள்.

இப்போது, அந்த சேவல் நகரின் முக்கியப் பிரமுகராகிவிட்டது. உள்ளூர் போக்குவரத்து காவல்துறையின் “கெளரவ தலைவராக” செப்டம்பர் மாதத்தில் அந்த சேவல் பதவி வகித்தது. மேலும் 2017ம் ஆண்டு சீன ராசி சினத்தில் சேவலின் சின்னமாக இருப்பதால், அவ்வாண்டின் புத்தாண்டு அட்டைகளை உருவாக்கும் நிகழ்ச்சியில் இந்த சேவல் கலந்து கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

“சேவல்கள் முட்டையிடுவதில்லை என்பதால், அவற்றைக் கைவிட்டுவிடுவார்கள். அல்லது இப்படி உணவாக்கிவிடுவார்கள். மசாஹிரோ இதற்கு மாறாக, வாழ்க்கையை உணர்த்தியிருக்கிறது” என்று அதைக் கொஞ்சியபடியே கூறினார் ஷின் நிஷியோகா (47) என்ற விலங்கு மருத்துவர்.

மேலும் படிக்க