• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக் பில்லியன் நாட்களில் உலகளாவிய முதல் தொகுப்பு அறிமுகம்

October 10, 2020 தண்டோரா குழு

ஃபிளிப்கார்ட், இந்திய நுகர்வோருக்காக மோட்டோரோலா ஸ்மார்ட் வீட்டு உபகரணங்களின் வரிசையை அறிமுகம் செய்யவுள்ளதை அறிவித்துள்ளது.

அக்டோபர் 15 முதல், ஃபிளிப்கார்ட்டின் தி பிக் பில்லியன் நாட்கள் விற்பனை நிகழ்வின் போது, ஸ்மார்ட் குளிர்சாதன பெட்டிகள் (ரூ. 51,990 முதல் துவங்கும் விலைகளில்), ஸ்மார்ட் ஏர் கண்டிஷனர்கள் (ரூ. 32,999 முதல் துவங்கும் விலைகளில்) மற்றும் ஸ்மார்ட் சலவை இயந்திரங்கள் (ரூ.23,499முதல் துவங்கும் விலைகளில்)அடங்கிய தொகுப்புகள், TruWifi தொழில்நுட்பத்துடன் வருகிறது, நுகர்வோர் தங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் இச்சாதனங்களை அணுகலாம். இப்புதிய தயாரிப்புகளின் தொகுப்பானது இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு 10.0 ஸ்மார்ட் டிவி – மோட்டோரோலா Revou சீரிஸ் மற்றும் மோட்டோரோலா ZX2 2 சீரிஸ் ஆகியவை ரூ. 13,999 முதல் துவங்கும் விலைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மோட்டோரோலா மொபிலிட்டியின் தேசியத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பிரசாந்த் மணி கூறும்போது,

“இந்த விழாக்காலத்தில் ஃபிளிப்கார்ட்டுடனான எங்கள் செயல்திட்ட பிராண்ட் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சிகள். ஸ்மார்ட் வீட்டு உபகரணங்களின் வகையினங்கள் ஸ்மார்ட்டானது மற்றும் புரட்சிகரமானது. அவற்றின் இணைக்கப்பட்ட அம்சம் மூலமும், பயன்படுத்த மிகவும் உள்ளுணர்வுடன் கூடிய பல்வேறு நுகர்வோர்களை முதன்மையாகக் கொண்ட புதுமைகளுடனும், எங்கள் நுகர்வோர் விரும்பும் ஒரு சிறந்த வாழ்க்கை முறைக்கு உகந்ததாக அவை திகழ்கின்றன.” என்று கூறினார்.

மேலும் படிக்க