October 10, 2020
தண்டோரா குழு
பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவு கோவை மாவட்ட செயலாளராக கணபதி ஜான்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் புருஷோத்தமன், குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை பா.ஜ. மாநில தலைவர் முருகன் ஒப்புதலுடன் மாநில பொது செயலாளர் செல்வகுமார், மாநில பொருளாளர் சேகர், கோவை மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார், கோவை மாநகர் மாவட்ட அரசு தொடர்பு பரிந்துரையின் பேரில் கோவை மாநகர் மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் ராஜன் நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களை கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.