• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்வையாளர்கள் இன்றி கிரிக்கெட் தொடர்

October 10, 2020 தண்டோரா குழு

கோவையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்வையாளர்கள் இன்றி அரசு விதித்துள்ள நடைமுறைகளுடன் துவங்கிய முதல் கிரிக்கெட் தொடர் போட்டியை ஜே.ஆர்.டி.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

கடந்த ஆறு மாதங்களாக கொரோனா கால ஊரடங்கால் பொது மக்கள் எந்த வித பொழுது போக்குமின்றி வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருந்த நிலை இருந்தது. இந்நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து கோவையில் ஆர்.கே. ரோலர் ட்ராபி சார்பாக முதலாம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பர்லி கிரவுண்டில் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதன் துவக்க விழாவில் ஜே.ஆர்.டி. குழுமங்களின் தலைவர் ஜே.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

ரஞ்சித் மற்றும் கண்ணன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த போட்டிகளில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 32 அணியினர் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். பார்வையாளர்கள் இன்றி,அரசு விதித்துள்ள நடைமுறைகளுடன் வீரர்கள் அனைவரும் முக கவசங்கள் அணிந்தால் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விழாவில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னால் மாமன்ற உறுப்பினர்கள் மணி மேகலை ,கோமதி காட்டுதுரை மற்றும் அந்த பகுதியினர் கலந்து கொண்டனர்.போட்டிகளில் வெற்றி பெறும் முதல் முன்று அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளும் மேலும் எல.இ.டி டிவி போன்ற சிறப்பு பரிசுகளும் வழங்க உள்ளதாக போட்டி ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க