October 9, 2020
தண்டோரா குழு
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து கோவையில் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்பு கூட்டமைப்பு சார்பாக பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து நீதிமன்றங்களில் நீதியுடன் தீர்ப்பு வழங்குங்கள் என்ற கோசத்துடன் கருப்புக்கொடி ஏந்தி செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், இயக்கங்கள், இஸ்லாமிய பொதுமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை யொட்டி தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தலைமையில் கோவை, திருப்பூர் ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.மேலும் கோவை மாநகர் புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.