October 9, 2020
தண்டோரா குழு
சலூன் கடை உரிமையாளரின் மகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளி நிரபராதி என்று தீர்ப்பு வழங்கியதை கண்டித்து கடையடைப்பு நடைபெற்றது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவரின் 12 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் கிருபாகரன் என்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 29ம் தேதி என்று போதிய சாட்சியங்கள் இல்லாததால் கிருபாகரன் நிரபராதி என்று விடுதலை செய்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று சலூன் கடைகள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் சுமார் 5000 சரணம் கடைகள் அடைக்கப்பட்டன கோவை மாநகரில் 1500க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சலூன் கடை உரிமையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும் சில கடைகளின் முன் கருப்புக் கொடி கட்டியும் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.சலூன் கடை சங்கத்தின் ஒரு சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த வழக்கிற்கு நீதி கேட்டு மனு அளித்துள்ளனர். குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சலூன் கடை உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர்.