October 9, 2020
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மகளிர் அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை செல்வபுரத்தில் நடைபெற்றது.
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தவர்களை தூக்கிலிட கோரியும்,உத்தரபிரதேச அரசை கண்டித்தும், தொடர்ந்து இந்தியாவில் கற்பழிப்பு சம்பவம் அதிகரித்து வருவதை கண்டித்து மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவையின் சார்பாக கோவை செல்வபுரம் சிவாலயா முன்பு மாவட்ட செயலாளர் H.ரஷீதா பேகம்தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாஜிதா,
இந்திய மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா, மகளிர் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அசினா, ஜுவைரியா, பர்வீன் பானு, மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.