October 7, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களையும் ஒருங்கிணைத்து இந்து ஆலய நல வாரியம் அமைத்திட வலியுறுத்தி கோவையில் இந்து மக்கள் கட்சி விவேகானந்தர் மக்கள் இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் இந்து மக்கள் கட்சி விவேகானந்தர் மக்கள் இயக்கம் சார்பாக தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சிவபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இதில்,அமைப்பாளர் நீல மேகம்,பல்லடம் பகுதி ராஜகோபால், கோவை மாவட்ட தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்,தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இந்து ஆலயங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து , இந்து ஆலய நல வாரியம் அமைத்து , அதில் கௌரவ தலைவர்களாக மடாதிபதிகளை நியமித்து ஒரு ஐஏஎஸ் ( IAS ) சிறப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் சட்ட சபையில் அறிவித்ததைப்போல் தமிழத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆன்மீகவாதிகளை தேர்ந்தெடுத்து, இந்த நலவாரியத்தில் உறுப்பினராக்கி, இந்து ஆலய நல வாரியம் உடனடியாக அமைத்திட வேண்டும்.இந்து ஆலயங்களுக்கு உண்டான அனைத்து சொத்துக்களையும், தலைமை நீதிமன்றத்தின் உத்திரவின்படி அந்த சொத்துக்களை எல்லாம் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டு ஆலய நலவாரியத்திடம் ஒப்படைத்து , அனைத்து ஆலயங்களையும் குறைவில்லாமல் சிறப்பாக பராமரிக்கவும், இந்து ஆலய சொத்துக்களை எக்காரணம் கொண்டும் வேறு எந்த திட்டத்திற்காகவும் பயன்படுத்தக்கூடாது , இந்து ஆலயங்களில் இருந்து வரும் வருவாய் அனைத்தையும் ஆலயத்தின் திருப்பணிக்காகவும் , வழிபாட்டிற்காகவும், ஆலயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காகவும். வருமானம் இல்லாத ஆலய வழிபாட்டிற்காகவும் பயன்படுத்த வேண்டும்,உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் பத்திரசாமி, இளைஞரணி முருகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.