October 7, 2020
தண்டோரா குழு
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்து வரும் சூழலில் கடந்த சில நாட்களாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மூத்த நிர்வாகிகள் பலரும் சந்தித்து வருகின்றனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சர் வீடுகளுக்கு சென்று மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில்,அதிமுகவை வழிநடத்தும் 11 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றவர்கள் யார் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.
அதிமுகவை வழிநடத்தும் 11பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு
1.திண்டுக்கல் சீனிவாசன்
2. தங்கமணி
3.எஸ்.பி.வேலுமணி
4.ஜெயக்குமார்
5.சி.வி.சண்முகம்
6.காமராஜ்
7.ஜே.சி.டி பிரபாகர்
8.மனோஜ் பாண்டியன்
9.பா.மோகன்
10.இரா.கோபாலகிருஷ்ணன்
11.மாணிக்கம் எம்எல்ஏ