October 6, 2020
தண்டோரா குழு
கோவையை சுற்றி அழகான சினிமா படப்பிடிப்பு தளங்கள் அதிகமாக உருவாகி வருவதாகவும், தனது மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் கோவையிலேயே நடைபெற்றதாக பிரபல திரைப்பட நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் அறிமுக விழா டொயோட்டா வளாகத்தில் நடைபெற்றது. இதற்கான விழாவில் பிரபல திரைப்பட நடிகரும் இளம் தொழில் முனைவோரும் ஆன மாதம்பட்டி ரங்கராஜ் புதிய காரை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில்,
சிறிய வயதில் இருந்தே தமக்கு கார்கள் என்றால் மிகவும் ஆர்வம் எனவும்,தற்போது அறிமுகம் ஆகி உள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரில் கார் பிரியர்களுக்கான அனைத்து அம்சங்களும் நவீன வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் தற்போது மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளதாக கூறிய அவர் தனது படங்கள் அனைத்தையும் கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே பிரபல சினிமா ஸ்டுடியோக்கள் கோவையில் இருந்த நிலையில் தற்போது கோவையில் அதிக சினிமா படப்பிடிப்புகள் நடைபெற வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.