• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வியாபாரியிடம் 22 டன் அரிசி வாங்கி மோசடி – இளைஞர் கைது

October 6, 2020 தண்டோரா குழு

திருச்சியை சேர்ந்த வியாபாரியிடம் 21 டன் அரிசி வாங்கி மோசடி செய்த கோவை இளைஞரை போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் பீமாநகரை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் மகன் முகமது தமீமுன் அன்சாரி (39). இவர் திருச்சியில் உள்நாட்டு ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த அஷ்ரப் மற்றும் சலீம் என்ற இரண்டு பேர் இணையதளத்தில் அனுகி, இருவரும் போத்தனூர் பகுதியில் நடத்தி வரும் அரிசி மண்டிக்கு 21 டன் அரிசி வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களது நிறுவனத்தின் ஜி.எஸ்.டி எண்ணையும் அனுப்பி வைத்ததால். இதை நம்பி முன் பணம் பெறாமல் சுமார் ரூ.9 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 21 டன் அரிசி மூட்டைகளை கோவைக்கு அனுப்பி வைத்துள்ளார். 21 டன் அரிசியை வாங்கிக்கொண்டு தொடர்ந்து பணம் தராமல் ஏமாற்றி வந்த நிலையில் மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன் அஷ்ரப்பை நேரில் சந்தித்து பணம் கேட்டுள்ளார், ஆனால் பணம் தராமல், பணம் கேட்டால் கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து முகமது தமீமுன் அன்சாரி போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இது வழக்கு பதிவுச் செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அஷ்ரப் ஏற்கனவே பல மோசடிகளில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த அஷ்ரப் (33) போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க