• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருதமலை மலைப்பகுதியில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது

October 5, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வடவளளி அருகே உள்ள ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து ஸ்கார்பியோ வாகனத்தில் 3 பெண்கள் உட்பட எட்டு நபர்கள் வந்து உள்ளனர்.

மதியம் 12 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் பொழுது மலைப்பகுதியில் உள்ள இடும்பன் சன்னிதி கீழே ஒன்பதாவது வளைவில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவர் மற்றும் மரத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். காயமடைந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மருதமலை கோவில் செல்லும் மலைப் பகுதியில் வாகன விபத்து நடப்பது அதிகரித்துள்ளதால் மலைப் பகுதிகளுக்கு செல்லும் தனியார் வாகனங்களில் வாகன ஓட்டிகளின் லைசென்சை அடிவாரப் பகுதியில் ஆய்வு செய்து மேலே அனுப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க