October 5, 2020
தண்டோரா குழு
உத்திரப்பிரதேச மாநிலம் ஜத்திராஸில் தலித இன பெண் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கபட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த அப்பெண்ணின் உடலை உறவினர்களிடம் கூட வழங்காமல் காவல்துறையினர் எரித்துவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களையும் செய்தி சேகரிக்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.அதையும் தாண்டி செய்தி எடுக்க சென்ற பெண் ஊடகவியலாளர் மற்றும் ஒளிப்பதிவாளரையும் அங்குள்ள காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த பெண் நிதுபர் அங்கேயே இருந்த பெண் செய்தியாளர் செய்தி சேகரிக்க முயன்றார்.செய்தியாளருக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கபட்டதை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து ஊடகவியலாளர்கள் சார்பில் உ.பி அரசையும் காவல்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது.
இதில் பல்வேறு ஊடங்களில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்தை கண்டித்தும் காவல்துறையினரை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை உறுதி படுத்த வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பட்டது.