October 3, 2020
தண்டோரா குழு
கோவை போத்தனூர், ஈச்சனாரி ரயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைக்கபட்ட ரகசிய தகவலின் அடிப்படையில், இரு வேறு இடங்களில் நடந்த சோதனையில், சுமார் 2 1/4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சோதனையின் போது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக அங்குமிங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்ததை பார்த்த போலீசார், அவரை சோதனை செய்த போது, அவரிடம் 1.100 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசாரின் விசாரனையில் கஞ்சா விற்பனையில், ஈடுபட்ட நபர் ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்த அனிஷ் பாபு (36) என்பது தெரியவந்தது.இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அணிஷ் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல், ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த, 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, அவர்களிடம் 1.250 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இருவரும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (21) மற்றும் சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (எ) சீனு என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.