• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் வகையில் உணவு வாகனம் அர்ப்பணிப்பு

October 2, 2020 தண்டோரா குழு

கோவையில் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் வகையில் உணவு வாகனம் அர்ப்பணிக்கப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவற்றோர் மற்றும் ஏழைகள் என ஆயிரக்கணக்கோர் பல்வேறு சிகிச்சை பெறுவதெற்கென வந்து செல்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு வரும் பொதிமக்களின் நலன் கருதி தினமும் மதிய உணவு வழங்குவதெற்கென பிரத்யேக உணவு வாகனத்தை கோவை மனிதநேய பவுண்டேஷன் அறக்கட்டளையினர் உருவாக்கியுள்ளனர்.

இந்த வாகன அர்ப்பணிப்பு நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் சுலைமான் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினர்களாக அனுபவ் ரவி,ஸ்ரீதேவி சிவ கணேஷ்,சென்னை மொபைல்ஸ் சம்சு அலி ஆகியோர் கலந்து கொண்டு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுலைமான்,

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் ஆதரவற்ற,ஏழை குடும்பத்தினர்களுக்கு உணவு வழங்கும் நோக்கத்தில் இந்த வாகன சேவை துவங்கியுள்ளதாகவும்,முழு நேரமும் உணவு வழங்கு வதெற்கெனவே இந்த வாகனத்தை பயன்படுத்த உள்ளதாக கூறிய அவர்,தினமும் ஐநூறு முதல் ஆயிரம் பேர் வரை உணவளிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தென்றல் அறக்கட்டளை சித்தீக்,அறம் சேவா அயூப் அலி,பால்ராசு மற்றும் சௌகத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க