• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயற்கை விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான முயற்சி

October 2, 2020 தண்டோரா குழு

இயற்கை மேலாண்மையை ஊக்குவிக்கவும், இயற்கை விவசாயத்தை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான முயற்சியை இயற்கை ஆர்வலர்கள்
கையிலெடுத்துள்ளனர்.

தீ கிரீன் பார்ம்ஸ், சார்பில் கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் வாயிலாக இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகின்ற, டாக்டர் திவ்யா வாசுதேவன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காகவும்,இயற்கை விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான உத்தரவாதத்தை வழங்குவதற்காகவும், கோவையிலுள்ள ஜீ.வி ரெசிடென்சி பகுதியினை வாடகைக்கு வழங்கியிருக்கிறோம்.இங்கு இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துவதற்கான, பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, குழந்தைகளை விவசாயிகள் போல வேடமிட்டு சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. மேலும் தீகிரீன் பார்ம்ஸ்ன் முக்கிய பங்காக, கோவை மாவட்டத்தில் நகர்ப்புறத்தில் காய்கறிகளை வளர்க்கவும், அதனை அறுவடை செய்யவும் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், நஞ்சில்லா இயற்கை காய்கறிகளை வளர்க்க பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும், இயற்கையுடன் சேர்ந்து குடும்பத்துடன் நேரத்தை செலவிடுதல், என பல்வேறு முக்கிய அம்சங்களை வெளிக் காட்டி வருகின்றனர் மேலும், இதனை நகர்ப்புற மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் தீ, பவுண்டேசன் கடந்த ஒரு வருடமாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், கல்லூரிகளையும், தத்தெடுத்து சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தை சொல்லிக் கொடுத்து வருகிறோம் எனவும், 4 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட உழவர்களுக்கு இயற்கை விவசாயத்தைக் கற்றுக் கொடுத்து உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க