October 2, 2020
தண்டோரா குழு
கோவையில் இளைஞர் காங்கிரசார் சார்பாக நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் மாநகராட்சி வளாகத்தில் வைத்திருந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கோவையில் இளைஞர் காங்கிரஸ் மற்றும் மனிதஉரிமைகள் குழு சார்பாக காந்தி ஜெயந்தி விழா மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இதில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தி சிலைக்கு மனித உரிமைதுறை மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் சமூக விலகல் மற்றும் முக கவசங்கள் அணிவது குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ,பிரசாத்,நசீமுல்லா,ஜேம்ஸ், சதாம்உசேன் ஹா௫ன்செரீப், உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.