• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நேரு நகர் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழா

October 2, 2020 தண்டோரா குழு

கோவை நேரு நகர் அரிமா சங்கம் சார்பாக நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் பொதுமக்களுக்கு இலவச முக கவசங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கோவை நேரு நகர் அரிமா சங்கம்,கலாம் மக்கள் அறக்கட்டளை மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் இணைந்து நடத்திய காந்தி ஜெயந்தி விழா கோவை நேரு நகர் பகுதியில் நடைபெற்றது.நேரு நகர் அரிமா சங்கத்தின் செயலாளர் அரிமா செந்தில்குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினராக மத்திய மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முக கவசங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து SMS Social distance, Mask, Sanitizing எனும் மூன்று செயல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் இது குறித்த விழிப்புணர்வு வரும் காலங்களில் பொதுமக்களிடையே அதிகரிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் முன்னால் மண்டல தலைவர் காளியப்பன்,நேரு நகர் அரிமா சங்க தலைவர் நந்தகுமார், காளப்பட்டி அரிமா சங்க தலைவர் திவாகர்,மற்றும் லேண்ட் மார்க் செமிக், வெங்கடேஷ், யுவராஜ், கனகராஜ் ,காளப்பட்டி ராஜேஷ், லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க