October 1, 2020
தண்டோரா குழு
மத்திய அரசு 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு உடனடியாக வழங்கிட வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசுத்துறை நிறுவனமாக இருந்து வந்த தொலைத்தொடர்புத்துறை நிறுவனம், பிஎஸ்என்எல் ஆக மாறி 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அமைப்பு தினமான இன்று நாடு முழுவதும் பிஎஸ்என்எல் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் இதனை கருப்பு தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 1995ம் ஆண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் மொபைல் சேவைகள் வழங்க மத்திய அரசால் உரிமம் வழங்கப்பட்டது. பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றுக்கு பல போராட்டங்களுக்குப் பின் ஏழு ஆண்டுகள் கழித்து மொபைல் சேவை அனுமதி அளிக்கப்பட்டது.
இதனிடையே, மொபைல் சேவையை ஏழை எளிய மக்களுக்கு கொண்டு சென்றது பிஎஸ்என்எல் எனவும், ஒரு சில ஆண்டுகளிலேயே தனியார் தொடர்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடத்தை பிஎஸ்என்எல் பிடித்ததாகவும், கடந்த 2007ம் ஆண்டு 4.5 கோடி இணைப்புகள் விரிவாக்கத்திற்கான பொய்யான காரணம் சொல்லி ரத்து செய்யப்பட்டதாகவும் டெண்டர் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த காலகட்டத்தில் மொபைல் விரிவாக்கம் பெரிய அளவில் நடைபெற்று, தனியார் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சந்தையில் 85 சதவீதத்தை கைப்பற்றியதால் பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்ததாகவும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் முயற்சியால் கடந்த 2013ம் ஆண்டு முதல் மீண்டும் லாபத்திற்கு வர ஆரம்பித்தது என தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜியோ நிறுவனத்தின் வருகையால் உச்சத்திலிருந்த இரண்டு நிறுவனங்கள் தள்ளாடியதாகவும் இந்திய நாட்டு மக்களுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே வாடிக்கையாளர்களை இழக்காமல் புதிய வாடிக்கையாளர்களை பெற்று வருவதாகவும், பேரிடர் காலங்களில் லாப நஷ்டங்கள் பார்க்காமல் இயங்கிவரும் ஒரே நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனம் தான் எனவும் தெரிவித்தனர்.
சென்னை முதல் அந்தமான் வரையிலான ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் கடலுக்கு அடியில் கேபிள் பதிக்கும் பணிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் குளிர்காலத்திலும் சிறப்பாக செய்து முடித்தது பிஎஸ்என்எல் தான் எனவும் ஆனால், 4ஜி சேவையை மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து மறுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.மேலும், 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜியோ சேவை 4ஜி அலைக்கற்றை சந்தைக்கு வந்ததாகவும் பிஎஸ்என்எல்-க்கு மட்டும் மத்திய அரசு இன்று வரை 4ஜி சேவை மறுத்து வருவதாகவும் அலைக்கற்றை ஒதுக்கிவிட்டு அதனை பயன்படுத்த முடியாதபடி 4ஜி கருவிகளை வாங்கும் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. தற்போது உள்ள டவர்ளை மேம்படுத்தலாம் என இருக்கும் நிலையில், மத்திய அரசு அதற்கும் அனுமதி மறுப்பதாகவும் சாத்தியமில்லாத நிபந்தனைகளை மத்திய அரசு விதிப்பதாக குற்றம்சாட்டினர்.
எனவே, டேட்டா யுகத்தில் மக்களுக்கு சிறப்பான ஒரு சேவையை அளிக்க பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை உடனடியாக வழங்க அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் இதனை உறுதிப்படுத்தவில்லை எனில் புத்தாக்கம் மிகவும் கேள்விக்குறியாகிவிடும் என்றவர்கள், பொதுத்துறை நிறுவன சேவைகள் இல்லையெனில் வாடிக்கையாளர் நியாயமான தொலைத்தொடர்பு சேவை பெற முடியாமல் போய்விடும் என்றனர்.
மேலும், தற்போது இதனை நடைமுறைப்படுத்தா விட்டால் எப்போதும் இது கிடைக்காது என்பதை புரிந்து கொண்டு மத்திய அரசு உடனடியாக இதனை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாகி 20 ஆண்டுகள் நிறைவடையும் இந்த நாளில் இதனை கருப்பு தினமாக கடைபிடித்து மனவேதனையுடன் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தனர்.