• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கலாச்சார ஆய்வு குழுவை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டம்

September 30, 2020 தண்டோரா குழு

கலாச்சார ஆய்வு குழுவை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தினர் முற்றுகையிட்டனர்.

திராவிடப் பண்பாட்டு கூட்டு இயக்க குழு உறுப்பினர்கள்,மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள கலாச்சார ஆய்வு நிபுணர் குழுவை உடனடியாக கலைக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்திய கலாச்சாரத்தின் ஆய்வு செய்வதற்காக மத்திய பாஜக அரசு 16 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.இந்த குழுவில் பிராமணர்களே அதிகமாக இருப்பதாகவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள்,பழங்குடி மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை என வலியுறுத்தியும் இந்தக் கலாச்சாரக் குழு அமைத்துள்ளது என்பது எதிர்காலத்தில் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என்றும் எனவே,இதனை உடனடியாக கலைக்க வேண்டும் என்றவர்கள் இதனை வலியுறுத்தும் முற்றுகையில் ஈடுபட்டனர்.இந்த முற்றுகை போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்டிபிஐ கட்சியினர், தமிழ் புலிகள் கட்சி உட்பட 18 கட்சியினர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க