• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

September 28, 2020 தண்டோரா குழு

வேளாண் தொடர்பான சட்டங்களை திரும்ப பெற கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பாக மதுக்கரை மார்க்கெட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் தொடர்பான 3 சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தியும், அதற்கு துணைபோன அதிமுகஅரசைக் கண்டித்தும் இன்று மாவட்டத் தலைநகரங்கள், நகராட்சிகள், ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கடந்த 21-ம் தேதி சென்னையில் நடந்த திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று,தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் படி கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பாக மதுக்கரை மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சேனாதிபதி தலைமை வகித்தார். இதில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

மதுக்கரை மத்திய ஒன்றிய செயலாளர் இ.பி.ஆர்.என்ற ராஜேந்திரன்,மதுக்கரை மேற்கு ஒன்றிய செயலாளர் ராணி சித்ரா ஆகியோர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இதில் தி.மு.க காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.

மேலும் படிக்க