September 27, 2020
தண்டோரா குழு
திருச்சியில் தந்தை பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றப்பட்டதற்க்கு கண்டனம் தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டத்திற்குள்பட்ட மணிகண்டம் ஒன்றியம்,இனாம்குளத்தூர் ஊராட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இந்த பெரியார் சமத்துவபுரம் முன்பாக தந்தை பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள், பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்து கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள,பெரியார் திராவிட கழகத்தின் முன்னால் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதனை தொடர்ந்து, த, பே, திகா, திராவிடர் விடுதலைக் கழகம், தீண்டாமை ஒழிப்பு முண்ணனி, மே 17 இயக்கம், போன்ற பல்வேறு கட்சிகனர் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.