• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எல்லா வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் அடங்கிவிட்டது – மோடி

September 25, 2020 தண்டோரா குழு

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5 முதல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எஸ்.பி.பி கடந்த வாரம் ஓரளவு உடல்நிலை முன்னேற்றம் பெற்ற நிலையில்,இன்று மதியம் சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி. மரணமடைந்தார்.அவரது மரணத்திற்கு திரையுலகினர் மற்றும் பல்வேறு பிரபலங்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி எஸ்.பி.பி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“எஸ்.பி.பி.-ஐ இழந்ததன் மூலம் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது. பல ஆண்டுகளாக எல்லா வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் அடங்கிவிட்டது. குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க