September 25, 2020
தண்டோரா குழு
கோவையில் இந்த மாதம் 18 முதல் 21 ஆம் தேதி வரை கே ஜி மருத்துவமனை மற்றும் தாஜ் ஹோட்டல் அருகே வாகனங்கள் களவாடப்பட்டதாக புகார் எழுந்துள்ளன. இதனை விசாரித்த ரேஸ்கோர்ஸ் போலிஸார் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் போலிஸார் நடத்திய விசாரணையில் மூன்று இருசக்கர வாகனத்தை களவாடியது தெரியவந்தன. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த மூன்று இருசக்கர வாகனம் பறிமுதல் செய்திருந்த போலிஸ் குற்றவாளிகள் இருவரையும் கோவை மத்திய சிறையிலடைத்தனர்.ஏற்கனவே இவர்கள் மீது பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக புகார் எழுந்தன.சிறை தண்டனையும் பெற்றனர். ஆனாலும் தொடர்ந்து களவு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.