September 24, 2020
தண்டோரா குழு
விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆண்டு தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன், ஜூலையில் ஒளிபரப்பி வந்த விஜய் டிவி, இம்முறை கரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால் அந்த திட்டத்தை தள்ளி வைத்தது. தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்து வந்ததால் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ சீசன் 4 ஷூட்டிங்கை விரைவில் தொடக்க
இருப்பதாக டீசர் வெளியானது.
இந்நிலையில், இன்று பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருப்பதாக விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், பாடகர் ஆஜித், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், அனுமோகன், ரியோ ராஜ், சனம் ஷெட்டி உள்ளிட்டோர் இம்முறை போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.