• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அண்ணா காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

September 24, 2020 தண்டோரா குழு

வியாபாரிகளிடம் முறைகேடாக பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வரும் கோவை அண்ணா காய்கறி மார்க்கெட் குத்தகைதாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாபாரிகள் மார்க்கெட் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை-மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணா காய்கறி சந்தையில் நானூறுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் சிறிய அளவிலான கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்த நிலையில் அங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டண முறை கழிப்படம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான குத்தகைதாரராக காளியப்பன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு மார்க்கெட் தற்காலிகமாக தடாகம் சாலையிலுள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த சூழலில் குத்தகைதாரரான காளியப்பன் அங்குள்ள வியாபாரிகளிடம் அதிகாரிகளின் பெயரை தவறாக பயன்படுத்தி அதிக அளவிலான தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் மீண்டும் பஇய இடத்திற்கே சந்தையை மாற்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறி ஒவ்வொரு கடை காரரிடமும் ஐந்தாயிரம் ரூபாய் வீதம் வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டி வியாபாரிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக அண்ணா மார்க்கெட் வளாகத்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் குத்தகைதாரரான காளியப்பனின் முறைகேடான நடவடிக்கைகள் காரணமாகவே வியாபாரிகள் பலர் கொரொனா நோய் பாதிப்புக்கு ஆளாகியதாகவும் மாநகராட்சி ஆணையர் பெயரில் உள்ள மின் இணைப்புக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை விட அதிக தொகையை வசூலித்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.வியாபாரிகள் போராட்டத்தை தொடர்ந்து அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.எனினும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்து வியாபாரிகளையும் இணைத்து பெரியளவிலான போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க