• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்

September 23, 2020 தண்டோரா குழு

கோவையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் வைரஸ் தொற்று காலத்தில் உரிய சம்பளம் வழங்கவும், வேலைநீக்கம் புதிய குறைப்பு நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தியும், உடலுழைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 7500 வீதம் தல 22 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா மற்றும் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் மசோதா,அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் தங்களது 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க