September 23, 2020
தண்டோரா குழு
கோவையில் விஜய் நற்பணி இயக்கம் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாஸ்டர் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாக வாய்ப்பில்லை. மாஸ்டர் திரைப்படம் திரையரங்களில் தான் வெளிவரும் திரையரங்குள் திறந்த பின்னர் திரைப்படம் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும். கோவிட்டினால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், அதனை நம்பியுள்ளவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளை திறக்கவில்லை எனில் பலரும் கஷ்டப்படுவார்கள். விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என நம்புகிறேன் என்றார்.