• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

September 22, 2020 தண்டோரா குழு

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை வழங்க வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மேம்பட்ட சிகிச்சை வழங்க வேண்டும்,நோய்த் தொற்று இருக்கிறதா? இல்லையா? என்று அறிந்து கொள்ள எடுக்கும் கால அவகாசத்தை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க