• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆன்லைனில் பணம் கேட்டு மிரட்டல் – கோவை கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

September 22, 2020 தண்டோரா குழு

கோவை செட்டிபாளையம் ஏழூரை சேர்ந்தவர் முருகேசன் வழக்கறிஞர். இவரது மகன் கோகுல கிருஸ்ணா (19). பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்த கோகுல கிருஸ்ணா குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ஆன் லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் வேலையை செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கோகுல கிருஸ்ணா சரியாக வேலை செய்யாததால் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, தனியார் நிறுவனம் கோகுல கிருஸ்ணாவிடம் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதனால் மன உலைச்சலுடன். இருந்த அவர் 18 – 09_ 20 அன்று மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.கோகுல கிருஸ்ணாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக முருகேசன் அளித்த புகார் அடிப்படையில் செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்மாக உயிரிழந்த மாணவனின் பெற்றோர்கள் மற்றும் கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்தராஜன் ஆகியோர்.கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடமும்.தன் மகனின் தற்கொலைக்கு காரணமான குஜராத்தை சேர்ந்த “NAT ENTERPRISE OFFICE AT VAP, என்ற நிறுவனத்தின் மீதும், மகனை தொலைபேசி வாயிலாக பணம் கேட்டு மிரட்டிய ” மின்ஹாஸ்” வழக்கறிஞர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என புகார்மனுவில் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் படிக்க