• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிவாரணத்தொகை கேட்டு மார்ட்டின் நிறுவன காசாளரின் மகன் ஆட்சியரிடம் மனு

September 21, 2020 தண்டோரா குழு

பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நிவாரணத்தொகை கேட்டு மார்ட்டின் நிறுவன காசாளரின் மகன் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உருமாண்டம்பாளையம் பகுதியைசேர்ந்த பழனிசாமி லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்தார்.அவரிடம் வருமானவரித்துறையினர் கடந்தாண்டு ஜீன் மாதம் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். பின்னர் வீடு திரும்பிய பழனிசாமி காரமடை அருகேயுள்ள குளத்தில் பிணமாக கிடந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், வருமானவரித்துறை அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக வழக்கு பதிவு செய்யக்கோரி வலியுறுத்தினர்.

இதனையடுத்து பழனிச்சாமியின் உடற்கூராய்வை,பாதிக்கப்பட்டவரின் சார்பாக ஒரு மருத்துவரும்,அரசு மருத்துவர்களும் இணைந்து செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்திரவிட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் மருத்துவர், உடற்கூராய்வு அறிக்கையை கொடுத்துவிட்டார். ஆனால் அரசு மருத்துவர்கள் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினார்.உயர்நீதிமன்றம் மூன்று மாதத்திற்குள் இவ்வழக்கை முடித்து , நிவாரணம் வழங்க உத்திரவிட்டும் காலம் கடத்தப்படுவதாக குற்றம் சாட்டி அவரது மனைவி , மகன் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க