September 17, 2020
தண்டோரா குழு
கோவை பீளமேட்டில் உள்ள பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் மருத்துவமனை வளாகத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.
உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில்,கோவை பீளமேட்டில் உள்ள பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் மருத்துவமனை வளாகத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.
மருத்துவமனையில் உடல் நல பாதுகாப்பு பணியாளர்கள்,நோயாளிகள் ஆகியோரின் பாதுகாப்பு என்ற தலைப்பில் இந்த ஆண்டு உலக நோயாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.நிகழ்ச்சியில் தீயணைப்பு பாதுகாப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு இருந்த அரங்கினை தலைமை நோடல் அலுவலர் டாக்டர் முரளி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தீயணைப்பான் கருவிகளை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன், பேராசிரியர் ஜெயவர்த்தனா, டி.விஜயா, டாக்டர் ரபி, மருத்துவ இயக்குனர் ராஜ்குமார், நர்சிங் சூப்பரெண்ட் டாக்டர் அனுராதா, டாக்டர் ராமமூர்த்தி, தீயணைப்புப் பிரிவு டாக்டர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உலக நோயாளிகள் பாதுகாப்பு வாரம் ஒரு வாரம் நடைபெற உள்ளது. இதில் நோயாளிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பிஎஸ்ஜி மருத்துவமனை டாக்டர்கள் பேசியுள்ளனர்.