September 17, 2020
தண்டோரா குழு
கோவை பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் 70 கிலோ கேக் வெட்டி பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடினர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவை பூமார்க்கெட் பகுதியை அடுத்த தெப்பக்குளம் மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஒரு வாரம் சேவை வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய உள்ளோம்.” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பிற மாநில அமைப்பு பிரிவின் மாநிலச் செயலாளர் ஹரிஸ் படேல் உள்ளிட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.