• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தண்ணீர் வாளியில் விழுந்து 9மாத குழந்தை பலி

September 16, 2020 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள சிவராஜ் கார்டன் என்ற பகுதியில் வசித்து வருபவர் அபுல் உசேன் (25) . இவர் அசாம் மாநிலம் ரூபாகி மாவட்டம் பகுதியிலிருந்து தன் குடும்பத்துடன் வந்து வேலை செய்து வருகிறார். இவருக்கு தர்ஷினி என்ற மனைவியும் மூன்று வயதில் பெண் குழந்தையும், சகோலம் என்ற‌ 9 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அதிகாலை எழுந்த கணவன் அபுல் உசேன் வேலைக்காக சென்றுள்ளார்.வீட்டில் இருந்த மனைவி தூங்கி கொண்டிருந்த நேரத்தில் 9மாத குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.‌ அப்போது அருகில் பாத்திரம் கழுவ தண்ணீர் நிரப்பிய வாளியில் குழந்தை தவறி விழுந்தது. தூக்கத்திலிருந்து எழுந்து தாய் பல இடங்களில் குழந்தையை தேடி உள்ளார்.அப்போது மயங்கிய நிலையில் குழந்தை தலைகுப்புற கிடப்பதைக் கண்டு என் கணவருக்கு தகவல் சொல்லி குழந்தையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து கொண்டான் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க