September 16, 2020
தண்டோரா குழு
தற்போதைய சூழலில் சவால்களை எதிர் கொண்டு ஆன் லைன் வழியாக கற்பித்தலில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களுக்கு கோவையில் விருதுகள் வழங்கப்பட்டது.
கொரோனா கால ஊரடங்கால் நாடு முழுவதும் ஸ்தம்பித்து உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளும் கடந்த ஆறு மாதமாக விடுமுறையில் உள்ளன.மாணவ,மாணவிகளின் கல்வி நிலை கருதி பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் ஆன்லைன் வழியாக வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை இரத்தினம் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா கல்லூரியின் தலைவர் முனைவர் மதன் செந்தில் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர்,
தற்போதையை சூழலில் ஆன்லைன் கல்வியில் ஆசிரியர்கள் மாணவர்களின் நலனில் பல்வேறு சவால்களை எதிர் கொண்டு கல்வி கற்பித்து வருவதாகவும், குறிப்பாக தற்போதைய முறையில் ஆசிரியர்கள் மாணவர்களை ஆன்லைன் வழியாக கண்காணித்து,கல்வியில் அவர்களை ஏழுச்சியூட்டுவது மிகப்பெரும் சவால் என குறிப்பிட்டார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக RENTLY SOFTWARE DEVOLEPMENT நிறுவனத்தின் இயக்குனர் பிஜோய் சிவன் கலந்து கொண்டு சிறந்த பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். இதில் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி மாணிக்கம்,தொழில் நுட்ப கல்லூரியின் முதல்வர் நாகராஜ்,கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.